தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

0 77

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட  இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காணொலி ஊடாக இடம் பெற்ற விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

இம் மீனவர்கள் 23 பேர் சார்பிலும் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி லோ.குகதாஸ் ஆஜரானார்.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்களுக்கெதிராகவும் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன் படுத்தக்கூடிய, அனுமதி பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை போன்ற மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி நாளை வரை வழக்கை ஒத்திவைத்ததுடன் நாளை குறித்த 23 மீனவர்களையும் மன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம் மீனவர்கள் வழக்கு விசாரணைகளுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளும் சமுகமளித்தனர்.

இந்திய மீனவர்களுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சட்டத்தரணி ஜோய் மகாதேவாவும் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.