Developed by - Tamilosai
தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்தக்கூடாது என்றும், இலங்கையின் எல்லைப் பகுதிக்குச் சென்று, ஏனைய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொழிலில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானித்துள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள அலுவலகம் ஒன்றில், மீனவர்கள் மற்றும் மீன்வளத் துறையினர், கடலோர காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று(20) காலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, சந்திப்பில் பங்கேற்ற இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.