Developed by - Tamilosai
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2 படகுகளுடன் குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மீனவர்களின் கைதினை கண்டித்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுத்திருந்த இராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று முதல் மீள மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட 12 பேரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் என இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.