தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எல்லா தமிழ் – முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே – மனோ

4 811

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் வலியுறுத்தினோம். 

அதை அந்த உரையாடலில் கலந்துக்கொண்ட எல்லாக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். 

என்னைப் பொறுத்தவரையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டுமல்ல, இந்த பொது நோக்கில் இணைந்து செயற்பட விரும்பும் எல்லா தமிழ் – முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே என எண்ணுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பிரதானமான கட்சி என்பதால், முதலில் அந்தக் கட்சி உள்வாங்கப்பட வேண்டுமெனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் தொடர்ந்து நிகழ வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன்.

யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த உரையாடல் ஏற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் அழைப்பின் பேரிலேயே நாம் கலந்துகொண்டோம். 

அடைக்கலநாதன் எம்.பியினதும், அவரது கட்சியினதும் இந்த முன்முயற்சி பாராட்டுக்குரியது எனவும் நான் எண்ணுகிறேன்

ஆனால், இத்தகைய உரையாடல் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய தமிழ் முற்போக்குக் கூட்டணியாக நாம் விரும்ப மாட்டோம் என அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

4 Comments
 1. auto approve list says

  Good way of describing, and good post to obtain facts regarding my presentation topic, which i am going to convey in institution of higher education.

 2. auto approve list says

  Quality content is the key to be a focus for the visitors to pay a visit the web page,
  that’s what this website is providing.

 3. auto approve list says

  Hi there Dear, are you truly visiting this web site regularly, if so afterward you will without doubt take pleasant experience.

 4. auto approve list says

  Hello would you mind letting me know which web host you’re utilizing?
  I’ve loaded your blog in 3 different browsers and I must say this
  blog loads a lot quicker then most. Can you recommend a good hosting provider at a honest price?

  Kudos, I appreciate it!

Leave A Reply

Your email address will not be published.