Developed by - Tamilosai
எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் , எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கையிருப்பில் போதியளவு சமையல் எரிவாயு இல்லாமையால், 12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் புதன்கிழமை(8) வரை விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய மக்களை வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.