Developed by - Tamilosai
இன்று நள்ளிரவு முதல் நாடாளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான தீர்வு எட்டப்படாமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை பெற்றோலிய தாங்கி தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷாந்த சில்வா தெரிவித்துள்ளார்.