Developed by - Tamilosai
இதுவரையில் எரிபொருள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளாத அல்லது பெற்றுக் கொள்ள முடியாமல் போன புதிய விநியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
பணிக்கு வராத உரிமதாரர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதியளவு ஒட்டோ டீசல், சுப்பர் டீசல், பெற்றோல் 92 மற்றும் மண்ணெண்ணெய் சந்தைக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.