Developed by - Tamilosai
பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எரிபொருள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டியவற்றை முன்வைத்துள்ளார்.
- 2000 CC-க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட அனைத்து கார்கள் மற்றும் SUV-களை தற்காலிகமாக திரும்பப் பெறுதல்.
- வாரத்திற்கு மூன்று நாட்கள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வௌ்ளிக்கிழமை அலுலகங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் வீடுகளில் இருந்தவாறு ஒன்லைன் ஊடாக கடமையில் ஈடுபடல்.
- மக்கள் அரச அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்கள், விண்ணப்பங்களை கையளிக்கும் நடைமுறைக்கு பதிலாக வீடுகளில் இருந்தவாறு WhatsApp, மின்னஞ்சல் போன்றவை ஊடாக அவற்றை அரச அலுவலகங்களுக்கு அனுப்பல்.
- அனைத்து அரச ஊழியர்களுக்கும் இயன்றளவு அவர்களது வீடுகளுக்கு அருகேயுள்ள அரச அலுவலகங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் அளித்தல்.
- மூன்று நாட்கள் பாடசாலை கல்வி, இரண்டு நாட்கள் ஒன்லைன் ஊடாக கல்வியை தொடரல்.
- அரச மற்றும் தனியார் துறை கூட்டங்களை நிறுத்தி Zoom ஊடாக கூட்டங்களை நடத்தி நேரத்தையும் எரிபொருளையும் சேமித்தல்.
- குறுந்தூர பயணங்களுக்காக ஆசனங்களற்ற பஸ்களை அறிமுகப்படுத்தி அதிகளவிலான பயணிகளை ஏற்றிச்செல்லல்.
- மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் கார்களுக்கு பதிலாக துவிச்சக்கரவண்டி பாவனையை ஊக்குவித்தல்.