Developed by - Tamilosai
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு பொது போக்குவரத்து சேவையை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று புதன்கிழமை 25 வீத தனியார் பேருந்து சேவைகள் மட்டுமே இயங்குவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் வழங்கலுக்கான உத்தரவு கிடைத்தபோதும், ஆறு பேரூந்து சாலைகளுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.
இந்தநிலையில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பேருந்து நேர அட்டவணைகள் திருத்தப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.எச்.பந்துல ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சேவைகளை நிறுத்தப்போவதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் எச்சரித்துள்ளது.