தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எரிபொருள் தட்டுப்பாடு செயற்கையானது – காரியவசம்

0 431

உலக சந்தையில் அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக ஆளும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை குறைவினால் மக்கள் பயனடைவார்கள் எனவும், எதிர்காலத்தில் அதற்கேற்ப எரிபொருள் விலை குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காரியவசம் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு செயற்கையானது எனவும், சிலர் தேவையற்ற வகையில் எரிபொருளை சேமித்து வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலர் சட்டவிரோதமாக எரிபொருளை சேமித்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சாதாரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் பௌசர் வரும் அது இரண்டு நாட்களுக்கு போதுமானது ஆனால் தற்போது 07 முதல் 08 மணித்தியாலங்களுக்குள் எரிபொருள் கையிருப்பு தீர்ந்துவிடுகிறது என அவர் தெரிவித்தார்.

சிலர் தங்கள் வாகனங்களுக்கு அதிகபட்ச எரிபொருளைப் பெற்றுக்கொண்டு மேலும் மூன்று அல்லது நான்கு கான்களுக்கு எரிபொருள் நிரப்புகிறார்கள், இதனால் பலர் எரிபொருள் நிரப்புவதற்கான வாய்ப்பை இழக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

இதுவே எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று அவர் விளக்குகிறார்.

Leave A Reply

Your email address will not be published.