தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை- மன்னிப்புக் கோரியுள்ள நாமல்

0 457

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, போக்குவரத்து மற்றும் மின்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விளையாட்டு அமைச்சின் அத்தியாவசிய அதிகாரிகளை மாத்திரம் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு பொது நிர்வாக பிரிவின் அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.