Developed by - Tamilosai
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
எரிபொருளை பெற்றுத் தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிக்காரர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை இவ்வாறானவர்கள் குறித்த தகவல்கள் அறிந்திருப்பின் தமக்கு அறியப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.