Developed by - Tamilosai
நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் கிடையாது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை எதிர்க்கட்சியினரால் தொடர்ச்சியாக கூறப்பட்ட பொய்களில் ஒன்றாகும்.
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கருத்துக்கள் மாத்திரமல்ல, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரும், நானும் இணைந்து திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமையும் இதுபோன்றதொரு பொய்யாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.