Developed by - Tamilosai
எம்பிலிப்பிட்டிய கங்கே யாய பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவர் எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 42 லீற்றர் பெட்ரோல் 28, லீற்றர் டீசல், 42 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது. மேலும் மற்றொருவர் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் பதுக்கி வைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்ட்களை தேடி விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.