தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது”

0 99

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர்  உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கை பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் இலங்கைக்கு மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும்,
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதால் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என யாரும் அச்சமடையத்தேவையில்லை என்றும்  கம்மன்பில குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.