தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எரிபொருளுக்குத் தட்டுப்பாடு; செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை

0 83

 சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 17 சதவீத பெற்றோலும், 29 சதவீத டீசலும் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

கேள்விக்கு ஏற்ற வகையில் போதுமான எரிபொருள் நாட்டில் இருப்பதால் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தேவையில்லாமல் அஞ்ச வேண்டாமெனவும் குறித்த அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.