தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது- சஜித்

0 448

இடைக்கால அரசாங்கத்தில் பங்குகொள்ளும்படி யாரேனும் என்னை கட்டாயப்படுத்த முயற்சித்தால், அவர்களின் பெயர்களை வெளிப்படுத்திவிட்டு வீட்டுக்குச் செல்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “நாங்கள் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவும் பொது நிதியை கொள்ளையடித்தவர்களுடன் தொடர்புகொள்ளவும் விரும்பவில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சி அமைக்க மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்.

எனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்துவிட்டேன். அரசியலமைப்பு நெருக்கடியின்போது இது நடந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

மாற்று அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மாற்றப்படுவார் என்றும் சிலர் கூறுகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பதில் எனக்கு கவலையில்லை. யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் ‘ஹஸ்மா’ போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களைத் தொடங்குவதில் சிரமம் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகத்துடனான இராஜதந்திர உறவுகளை புதுப்பித்து அதற்கான உதவியைப் பெறும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.