Developed by - Tamilosai
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியை அமைந்தமை தனக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக மட்டுமே என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தமை நாட்டிற்கு நீதியை வழங்குவதற்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது குறித்த செயலணி தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தன்னால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு கட்சித்தலைவர்களிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தனது நண்பர் ஒருவரை நியமிப்பதற்கும் அனுமதி கோரவேண்டிய நிலை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நீதி அமைச்சர் அலி சப்ரியின் நியமனத்தின்போது கூட இவ்வாறு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.