Developed by - Tamilosai
பூகோள சூழ்நிலைக்கு அமைய தற்போதைய நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை எதிர்வுகூற முடியாது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கான முறைமையை அறிந்தவர்கள் இருப்பார்களாயின் தன்னைத் தாராளமாக சந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகில் பிரதான நாடான சீனா தனது ஐந்து நாள் சேவைத்துறையில் ஒரு நாளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறாயின் சீனாவிலும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
உலக சந்தையின் நிலவரத்திற்கு அமைய தேசிய மட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பதைத் தவிர வேறொரு தீரவும் கிடையாது என்பதை எதிர்த்தரப்பிலுள்ள பொருளாதார நிபுணர்கள் நன்கு அறிவார்கள்.
இருப்பினும் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.