Developed by - Tamilosai
ஏப்ரல் 3ஆம் திகதி நாடு முழுவதும் மக்களை வீதிக்கு இறங்குமாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக குழுக்கள் சில பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
எரிபொருள் நெருக்கடி, மின்தடை, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரதேசங்களிலும் 3ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வீதியில் வந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று அந்த குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டு விரக்தியில் உள்ள மக்கள் குறித்த தினத்தில் வீதிக்கு இறங்கினால் நாடு முழுமையாக ஸ்தம்பிக்கும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.