Developed by - Tamilosai
எதிர்வரும் 24 மணித்தியாலங்கள் தமது நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததென உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சனுடன் இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலின்போதே உக்ரைன் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் ஏவுகணை தாக்குதல்களை அதிகரிக்க ரஷ்ய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்றையதினம் நடத்திய தாக்குதலினால் உக்ரைன் இராணுவத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டதாக யுக்ரேன் இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் நாணய அலகான ருபெல் நூற்றுக்கு 30 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதென பொருளாதார ஆர்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே யுக்ரேன் விடயம் தொடர்பில் இன்றையதினம் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இதற்கென ஐ.நா பொதுச்சபை கூட்டம் அவசர கூட்டத்தை நியூவ்யோர்க்கில் ஒழுங்கு செய்துள்ளது.உக்ரைனை ஆக்கிரமித்து வரும் ரஷ்யா, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் இடங்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது என ஜீ 7 அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது