தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எதிர்க் கட்சி நாட்டை பொறுப்பேற்று நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல முடியும் – சரத் பொன்சேகா

0 442

நாட்டு மக்களுக்கு தொடர்ந்தும் பொய்யுரைக்காது அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும். எதிர்க் கட்சிக்கு நாட்டை பொறுப்பேற்று நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை மிக நேசிப்பவர்களாக நாட்டு மக்கள் உள்ளனர். நாட்டை நேசிக்கின்ற இளைஞர், யுவதிகள், வயோதிபர்கள் என சகல தரப்பினரும் வீடுகளிலிருந்து வீதிக்கு இறங்கி காலி முகத்திடலை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் சாதாரணமானவை. வாழ்வதற்குறிய நாட்டை உருவாக்கி தாருங்கள் என்றே அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.