Developed by - Tamilosai
அரசாங்கத்தில் அங்கம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தமது ஆதரவை விலக்கிக்கொள்ள தீர்மானித்தள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொண்டாலும் எதிர்க்கட்சியுடன் இணையாது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட இவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகிய பின்னர், அரசாங்கம் தனது பெரும்பான்மை பலம் தொடர்பான சவாலை எதிர்நோக்க நேரிடும் என்பதுடன் அது இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் மாத்திரம் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டு நெருக்கடி காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வாக்காளர்களின் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாக ஆளும் கட்சியை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளனர். ஏற்கனவே பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிகளுக்கு செல்லாது கொழும்பில் உள்ள தமது இல்லங்களில் தங்கியுள்ளனர்.