தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அச்சுறுத்தல் அழைப்புகள் – சஜித் பிரேமதாச

0 446

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தில் இணைக்கோரி 24 மணி நேரமும் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இடைக்கால அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு அதுவே என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்க நாடாளுமன்றக் குழுவிற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று அரசியல் நாடகம் அரங்கேறியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மக்களின் போராட்டத்தை மலினப்படுத்தும் முகமாகவே இடைக்கால அரசாங்கம் என்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.