Developed by - Tamilosai
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று முற்றாக நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக தங்களது பயணங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் அம்பிலிபிட்டிய சந்திரகா குளத்திற்கு அருகில் அதிகளவான மக்கள் கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் பெரும்பாலானோர் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டால் எதிர்காலத்தில் நாட்டிற்குப் பாரிய சிக்கல் ஏற்படலாம் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்.