தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஊழல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் அறிவியுங்கள் – வடக்கு ஆளுநர் கோரிக்கை

0 108

வடக்கு மாகாணத்தின் அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆதாரங்களுடன் தனக்கு அறிவிக்குமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கே அரச கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. 

நான் பதவியேற்று தற்போதைய காலம் வரையில் வடமாகாண அரச கட்டமைப்புக்களின் பல்வேறு மட்டங்கள் தொடர்பிலும் அவதானங்களையும் ஆய்வுகளையும் முன்னெடுத்து வருகின்றேன்.

இந்நிலையில் என்னுடன் தொடர்பாடியவர்கள் வடமாகாண அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளனர்.

மேலும் சிலர் அவ்விதமான விடயங்கள் சம்பந்தமாக என்னைத் தொடர்பு கொள்வதற்கு அல்லது சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

அவ்வாறான நிலையில், ஊழல், மோசடிகள் தொடர்பில் ஆதராங்களுடன் யாரும் அறிவிப்புக்களையோ அல்லது நேரடியாகச் என்னைச் சந்தித்தோ தகவல்களை வழங்க முடியும்.

அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது, உரிய விசாரணைகளை மேற்கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகவே உள்ளேன் – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.