Developed by - Tamilosai
முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்ட மூன்று இராணுவ சிப்பாய்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றுகாலை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை (27) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன்மீது இராணுவத்தினரால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இன்றையதினம்(28) முல்லைத்தீவு நகரில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.