தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உள்ளி மோசடி விவகாரம்: தொழிலதிபர் மகனும் சிக்கினார்

0 281

சதொசவில் இடம்பெற்ற உள்ளி மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டி தொழிலதிபர் ஒருவரின் மகன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மோசடிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

54 ஆயிரம் கிலோ கிராம் உள்ளி கொள்கலன் இரண்டை மோசடியான முறையில் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பம்பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரின் மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான இந்த மோசடிக்குத் தேவையான போலியான ஆவணங்களை தயாரித்து உதவியமை குறித்து 25 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்  வெலிசர நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, உள்ளி மோசடி தொடர்பில் 55 வயதுடைய பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் கடந்த 06 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.