Developed by - Tamilosai
நேற்று காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் புறக்கோட்டை உள்ளிட்ட 3 இடங்களில் அதிகளவான பணத்தை வைத்திருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கோடியே 86 லட்சத்து 95 ஆயிரம் ரூபா உள்நாட்டு பணமும், 4 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணமும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
புறக்கோட்டை டெனட் சந்தைக் கட்டிடத் தொகுதி, மாளிகாவத்தை நூரானிய சந்தி, கொழும்பு 10 முதலான இடங்களில் உள்ள 3 தங்க ஆபரண விற்பனை நிலையங்களில் இப்பணம் கைப்பற்றப்பட்டது.