Developed by - Tamilosai
வாட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் எனவும் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 2ஜிபி வரையிலான புகைப்படம், காணொளி போன்றவற்றையும் பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.