தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும் -சந்திரிக்கா எச்சரிக்கை

0 355

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது என்றும் நாடு மீண்டு எழ முடியாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவை என குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயகத்தை நேசிக்கும் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அவ்வாறு இணையாவிட்டால் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும் என்றும் சந்திரிகா குமாரதுங்க எச்சரித்தார்.

Leave A Reply

Your email address will not be published.