Developed by - Tamilosai
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஆபிரிக்க நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் தகவலின் படி இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் மட்டும் 71 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு பெரிய அம்மை தடுப்பூசியைசெலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரிய அம்மை தடுப்பூசி தொற்று மற்றும் கடுமையான பாதிப்புகளை குறைக்கும் திறன் கொண்டுள்ளது.