Developed by - Tamilosai
குறைந்த வயதில் தனியாக விமானத்தில் உலகை சுற்றிவந்து சாதனைப்பெண் இறுதியாக பெல்ஜியத்தில் தரையிறங்கியது.

ஜராவின் விமானம் பெல்ஜியத்தை சேர்ந்த ஜாரா ருதர்போர்ட் குறைந்த வயதில் தனியாகவிமானத்தில் உலகை சுற்றி வந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஜாரா ருதர்போர்ட் 155நாள் விமானபயணத்தின் பின்னர் பெல்ஜியத்தின் கொட்டிரிஜிக் விமானநிலையத்தில் பெரும் வரவேற்பின்மத்தியில் தரையிறங்கினார்.
விமானத்திலிருந்து தரையிறங்கிய அவர் தனது பெற்றோரை கட்டியணைத்தார்.
அதனை தொடர்ந்து அவரது சாதனையை உறுதிசெய்யும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
ஜாரா 52 நாடுகள் ஐந்து கண்டங்களிற்கு (51,000 கிலோமீற்றர் பயணித்துள்ளார்.