Developed by - Tamilosai
ரி – 20 உலகக் கிண்ணத் தொடரில் 28 ஆவது போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.
இந்தப் போட்டி டுபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணயச் சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு வழக்கம்போல் தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதில் அதிகபட்சமாக ஜடேஜா 26 ஓட்டங்களை எடுத்தார்.
கே.எல்.ராகுல் 18, இஷான் கிஷன் 4, ரோஹித் சர்மா 14, விராட் கோலி 9, ரிஷப் பண்ட் 12, ஹர்த்திக் பாண்டியா 23 என சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் 111 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி.
அந்த அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தனர். இதனால் 14.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.
இதில் கப்டில் 20, மிச்சேல் 49, கேன் வில்லியம்சன் 33, டேவன் 2 என ஓட்டங்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.