தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இரண்டாம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா

0 44

உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நேற்று (24) நடைபெற்றது.

இதில் உலகக்கிண்ண சதுரங்க தொடரின் இறுதிப் போட்டியில் நோர்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றதோடு, இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

Tie-breaks-இன் முதல் சுற்றுகளிலும் மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் உலகின் முதல் தர வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு சமநிலையில் (Draw) முடித்தார் பிரக்ஞானந்தா.

18 வயதான பிரக்ஞானந்தா கடந்த திங்கள் கிழமை Tie-breaker-இல் உலகின் மூன்றாம் நிலை வீரரான Fabiano Caruana வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நோர்வே வீரரான மேக்னஸ் கார்ல்சன், நிஜாத் அபாசோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

உலக செஸ் ரசிகர்கள் மத்தியில் மேக்னஸ் கார்ல்சன் என்றாலே ஒருவித புத்துணர்ச்சி பெருகிவிடும். அத்தகைய நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு முதல் இரண்டு சுற்றுகளையும் டிராவில் முடித்தார் பிரக்ஞானந்தா. எவ்வாறாயினும், இதற்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச சதுரங்க போட்டியொன்றில் மெக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ண சதுரங்க தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்தியா சார்பில் தெரிவான இரண்டாவது போட்டியாளர் என்ற சிறப்பையும் சதுரங்க தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவான இளம் போட்டியாளர் என்ற சிறப்பையும் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். கடந்த ஆண்டு, ஆன்லைன் ரேபிட் போட்டியான ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் கார்ல்சனை அவர் தோற்கடித்தார். அதுமட்டுமின்றி, நார்வே கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவையே சேரும்.

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு செஸ் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியரும் இவரே.

Leave A Reply

Your email address will not be published.