தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உரிய தடுப்பூசிகளை செலுத்தாது தம்மிக்க பாணிக்கு பின்னால் அரசாங்கம்

0 442

அரசாங்கத்தினால் அனைத்து நபர்களுக்கும் இலவசமாக வழங்கும் பரிசாக, கொவிட் தொற்று மாற்றமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் எடுக்கப்படும் தேவையற்ற தீர்மானங்களினால், பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தின் இயலாமை காரணமாகவே, இன்று ஆயிரக்கணக்கான உயிர்கள் இல்லாது போயுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் முதலாவது அலை ஏற்படும் போது விமான நிலையத்தை உரிய நேரத்தில் மூடவில்லை எனவும், உரிய தடுப்பூசிகளை செலுத்தாது, தம்மிக்க பாணிக்கு பின்னால் அரசாங்கம் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், மினுவங்கொட பகுதியில் மற்றுமொரு கொவிட் அலை ஏற்படும் போது, கம்பஹா மாவட்டத்தை மாத்திரம் மூடாதிருந்தமையினால், நாடு முழுவதும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஹர்ஷண ராஜகருணா தெரிவிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.