Developed by - Tamilosai
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பசளையின்றி சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மட்டக்களப்பிலுள்ள இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் மௌனமாகயிருப்பதாகவும் தங்களுக்கான பசளையினைப் பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“உரம் இன்றி உழவு இல்லை” விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி கண்டனப் போராட்டம் மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கண்டனப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா, பிரதேச சபையின் தவிசாளர் நா.புஸ்பலிங்கம் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள்,விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
முடக்காதே முடக்காதே எமது விவசாயத்தை முடக்காதே,அழிக்காதே அழிக்காதே எமது பொருளாதாரத்தை அழிக்காதே,திடீர் சேதனம் விவசாயத்தை முடக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
கொக்கட்டிச்சோலை சந்தியிலிருந்து பேரணியாக வந்து கொக்கட்டிச்சோலை கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.