தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உரப்பிரச்சினையில் அரசியல்; ஜே.வி.பி. – சு.க . கூட்டுச் சதி: மஹிந்தானந்த குற்றச்சாட்டு

0 246

இவர்களுடன் தற்போது அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒன்றிணைந்துள்ளனர் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம்சாட்டியுள்ளார்.இதேவேளை, விவசாயிகள் போராடுவது பயனற்றது என்றும் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளை உரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட நெல் விளைச்சலில், ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 70 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும்.

இரசாயன உர இறக்கமதிக்குத் தடை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் பிரதேசத்தில் விவசாயிகளுடன்  இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளைத் திட்டம் குறுகிய காலத்தில் வெற்றிபெறாது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். இத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர அரசாங்கம் தோல்வியடையவில்லை.

நாட்டு மக்களின் உடலாரோக்கியத்தை கருத்திற் கொண்டே இரசாயன உரப் பாவனை மற்றும் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேதன பசளை உரம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
அதற்காக 7 ஆயிரத்த 500 ரூபாய் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது. 
பெரும்போகத்திற்குத் தேவையான மேலதிக சேதன பசளை உரம் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு கமநல சேவையாளர் திணைக்களங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 உரப் பிரச்சினை இன்று அரசியலாக்கப்பட்டுவிட்டது. விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியினர் உள்ளனர். 

இவர்களுடன் தற்போது அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஒன்றிணைந்துள்ளனர் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை, விவசாயிகள் போராடுவது பயனற்றது என்றும் இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளை உரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட நெல் விளைச்சலில், ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 70 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும்.

இரசாயன உர இறக்கமதிக்குத் தடை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் பிரதேசத்தில் விவசாயிகளுடன்  இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சேதனப் பசளைத் திட்டம் குறுகிய காலத்தில் வெற்றிபெறாது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். இத்திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர அரசாங்கம் தோல்வியடையவில்லை.

நாட்டு மக்களின் உடலாரோக்கியத்தை கருத்திற் கொண்டே இரசாயன உரப் பாவனை மற்றும் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேதன பசளை உரம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
அதற்காக 7 ஆயிரத்த 500 ரூபாய் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டுள்ளது. 
பெரும்போகத்திற்குத் தேவையான மேலதிக சேதன பசளை உரம் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு கமநல சேவையாளர் திணைக்களங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.