Developed by - Tamilosai
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் அளவு (100,000 லீற்றர்) இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
5 மெட்ரிக் தொன் எடையுள்ள இந்த சரக்குகள் இந்தியாவின் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சரக்கு விமானத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
31 இலட்சம் லீற்றர் திரவ உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்ட நிலையில் அதன் முதல் தொகுதியாக இவையாகும்
அதனை கமநல சேவை மையங்களினூடாக இன்றைய தினம் முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.