தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இன்று வழங்கிய உத்தரவு

0 128

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் காணொளி மூலமாக இன்று (06) உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர்.

அதேவேளை சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர்இ உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுவிக்கப்பட்டதுடன் 2 பேருக்கு எதிராக கொழும்பில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதுடன் 2 பேரின் வழக்கு மேல் நீதிமன்றில் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதையடுத்து 60 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்குகளை கொண்ட 60 பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக நீதிமன்றிற்கு இவர்களை அழைத்துவர முடியாததையடுத்து அவர்களை காணொளி மூலமாக எதிர்வரும் 19 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்

Leave A Reply

Your email address will not be published.