தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயர் கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க முடியும்: புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு

0 161

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நவம்பர் முதலாம் திகதி முதல்  15 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தனவால் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான கற்பித்தலை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவற்றை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படக் கூடிய தினத்தை கல்வி அமைச்சு தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் உயர்தரம் மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிக்கவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை பராமரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாலர் பாடசாலைகளை 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களை சுகாதார விதிமுறைகளுக்கமைய ஆரம்பிக்க முடியும்.

பயிற்சி நிலையங்கள் அல்லது நிறுவனங்களை 50 சதவீதமானோரின் பங்கேற்புடன் ஆரம்பிக்க முடியும்.

நீதிமன்ற நடவடிக்கைகளையும் சுகாதார விதிமுறைகளுக்கமைய முன்னெடுத்துச் செல்ல முடியும்.

சினிமா திரையரங்குகளை 25 சதவீதமானோரின் பங்குபற்றலுடன் நடத்திச் செல்ல முடியும்.

உடற் பயிற்சி நிலையங்களை 30 சதவீதமானோரின் பங்கேற்புடன் நடத்திச் செல்ல முடியும். விளையாட்டு செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திறந்த வெளிகளில் ஏற்பாடு செய்யப்படும் திருமண வைபவங்களுக்கு அதிகபட்சம் 150 பேரை அனுமதிக்க முடியும்.

மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும் வைபவங்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதிகபட்சம் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மரணச் சடங்குகளில் 20 பேர் பங்குபற்றலாம். மத வழிபாட்டு ஸ்தலங்களில் கூட்டுப் பிரார்த்தனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.