தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார்-திஸ்ஸ குட்டியாராச்சி

0 255

அமைச்சர் உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மின்நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும், எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயும் பொறுப்புகூறவேண்டும். இதனை மறந்து இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்துக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமானால் எந்த பகுதி மற்றும் நேர விவரம் உரிய வகையில் அறிவிக்கப்பட வேண்டும் என நாம் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்.அதேவேளை, உதய கம்மன்பில என்பவர் எதிர்கால இலக்குடன் அரசியல் நடத்துபவர். அரசின் நல்ல திட்டங்களுக்கு உரிமை கோரும் அவர் ,பிரச்சினைகள் வரும்போது நழுவிவிடுவார். தற்போதைய நெருக்கடி நிலைக்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல என அவர் கூறுவது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடாகும்.” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.