Developed by - Tamilosai
மேன்மை கொள் திருக்கோணமலை.

திருக்கோணமலையில் இன்று முருகாபுரியிலுள்ள TRINCOMALEE BEACH RESORT & SPA வில் நடந்தேறிய திருக்கோணமலை சிவில் சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள், முயற்சியாளர்கள், பண்பாட்டியல் அமைப்புக்கள், நிபுணர்கள், அரசியலாளர்கள், எனக்கூடிய அமைப்புக்கள் திருக்கோணமலையின் சமூகப்பொருளாதார பண்பாட்டியல் மற்றும் அரசியல் தளங்களில் காத்திரமான மாற்றங்களை உருவாக்கும் “மேன்மைகொள் திருக்கோணமலை” (PUTTING TRINCO FIRST) என்ற வாசகத்துடனான மக்கள் நல பேரமைப்பை கட்டியெழுப்ப திடசங்கற்பம் கொண்டனர்.
மக்கள் நல பேரமைப்பிற்கான பெயரை வெளியிடும் இந்நிகழ்வில் திருக்கோணமலையின் பேண்தகு மாற்றத்திற்கான செல்நெறிப்போக்கொன்றை புத்தாக்கத்திற்கான அணியின் ( TEAM INNOVATIONS ஆய்வுப் பிரிவானது அமைப்பின் பிரதிநிதிகளுக்கு முன் சமர்ப்பித்ததுடன் அந்த செல்நெறி போக்கை (Sustainable initiatives Road Map) அமுல்படுத்துவதற்கான திடசங்கற்பத்தையும் ஒத்துழைப்பையும் வேண்டி நின்றார்கள்.
TRINCO ONE CIVIC ALLIANCE என்று பெயரிடப்பட்டிருக்கும் இப் பேரமைப்பில் இணைந்து கொள்ள இதுவரை 19 அமைப்புக்கள் தமது ஒத்துழைப்பை மனப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக புத்தாக்க அணியின் மக்கள் தொடர்பாளர் திரு சங்கரலிங்கம் மதியழகன் தெரிவித்தார்.
நிகழ்வை புத்தாக்கத்திற்கான அணி இலகுபடுத்தியதோடு Platinum Group of Companies (கூட்டு நிறுவனம்) வளப்பகிர்வை செய்திருந்தது.
பேரமைப்பில் இணைந்து கொள்ளும் அமைப்புக்கள் புத்தாக்க அணியின் இணையத்தள வழியாக www.teaminnovations.lk யில்பதிவுகளை நிறைவேற்றலாம் என அமைப்பின் தொடர்பாடல் இயக்குனர் தெரிவித்தார்.
நிகழ்விற்கு ஏராளமான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.