தமிழ் ஓசை
தமிழ் ஓசை

‘உக்ரைன் – ரஷ்யா ‘ – இன்று மீண்டும் சமரசப் பேச்சு

0 464

சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

உக்ரைன்- ரஷியா இடையேயான போர் 6-வது நாளாக நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை, ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், போர் முடிக்கு கொண்டு வர உக்ரைன்- ரஷியா இடையே பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சு நடைபெற்றது. ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த உயர்மட்ட தூதுக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சின்போது, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ராணுவத்தை வெளியேற்றும்படி ரஷியா தரப்புக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்தது.

சண்டையை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. பேச்சு ஐந்து மணி நேரம் நீடித்ததாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளரும் அந்நாட்டு தூதுக்குழு தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தெரிவித்தார்.இந்நிலையில், பெலராரஸ் நாட்டில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சு உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் இன்று இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.