Developed by - Tamilosai
உக்ரைனை மேலும் ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சித்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்-லிண்டா தோமஸ் – கிரீன்பீல்ட்
உக்ரைனை மேலும் ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சித்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் பிரதிநிதி லிண்டா தோமஸ் – கிரீன்பீல்ட் கூறியுள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நாவின் பாதுகாப்பு சபை இன்று அவசர கூடியது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், அதன் விளைவுகள் உலகம் முழுவதும் முக்கியமானதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர்,
“ ரஷ்ய அதிபர் புடினின் இந்த நடவடிக்கை, உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மீதான ரஷ்யாவின் தெளிவான தாக்குதல் ஆகும். இது உக்ரைனின் ஐ.நா. உறுப்பு நாடு என்ற அந்தஸ்து மீதான தாக்குதலாகும்.
இது சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறும் நடவடிக்கை. உக்ரைன் போரை தூண்டியதாக ஒரு சாக்குப்போக்கை உருவாக்க ரஷ்யா முயன்றது. இந்த நடவடிக்கை, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கான ரஷ்யாவின் முயற்சியாகும். இதுவே ஒரு போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.
சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறியதற்காக ரஷ்யாவை பொறுப்பேற்க செய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும்.
இந்த நிலைப்பாட்டில் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் தெளிவாக இருக்கிறோம். இந்த நேரத்தில் யாரும் ஓரணியில் நிற்க முடியாது” என்றார்.