Developed by - Tamilosai
இன்று பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்கின்றனர்.
தங்கள் ஆதரவைக் காண்பிக்கும் முயற்சியாகவே அவர்கள் இன்று உக்ரைனுக்கு செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ட்ராகி ஆகியோயோரே செல்லவுள்ளனர்.
ஐரோப்பிய மக்களின் தெளிவான ஆதரவை வீரத்துடன் செயற்படும் உக்ரைனியர்களுக்கு வழங்கவே தாம் அங்கு செல்லவுள்ளதாக இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீன ஜனாதிபதி, ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின்போது ரஷ்ய இறையாண்மைக்கு பீய்ஜிங்கின் ஆதரவை தெரிவித்துள்ளார்.