Developed by - Tamilosai
அருட்தந்தை சிறில் காமினியை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைத்தது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
அருட்தந்தை சிறில் காமினியோ வேறு எவரோ உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்திருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டும்.
பிரதான சூத்திரதாரி யார் என்று தெரிந்தால் அதனைத் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றே கோருகிறோம்.
நானும் கத்தோலிக்க மதத்தவர். நீங்களும் கத்தோலிக்க மதத்தவர். அவரை விசாரிப்பதில் தவறுள்ளதா?. ஞானசார தேரர் பற்றி நான் பேசவில்லை. நான் கத்தோலிக்க மதத்தவர். யாருக்காவது தகவல் தெரிந்தால் கூற வேண்டும்.
மதத்தலைவர்களை தேவையின்றி விசாரிக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. மக்களை சாகவிட்டு உறங்கியவர் தான் ஹரீன் பெர்னாண்டோ. இந்த தாக்குதல் பற்றி யாருக்காவது தெரிந்திருந்தால் தகவல் வெளியிட வேண்டும்.
அருட்தந்தை சிறில் காமினியோ வேறு எவரோ யாருக்கும் தகவல் தெரிந்திருந்தால் கூற வேண்டும். மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கூட அவமதித்தவர்கள் உங்கள் தரப்பில் உள்ளனர். அவருக்காக நாம் தான் குரல் கொடுத்தோம். ஹரீன் பெர்னாண்டோ அவரை அவமதித்தார்.
குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். மத போதகரா வேறு ஒருவரா என்பது பிரச்சினையல்ல. யாருக்காவது தகவல் தெரிந்தால் அதனை வெளியிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.