தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஈஸ்டர் தாக்குதல் – மைத்திரிக்கு சிறை தண்டணையா ?

0 253

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தன்னை சிறையில் அடைப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தாம் சிறையில் அடைக்கப்படவுள்ளதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“என்னை சிறையில் அடைக்க எந்த காரணமும் இல்லை. அது பொய். எந்த ஆதாரமும் இல்லை.”

“ஜனாதிபதியின் அல்லது பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து ஜனாதிபதிதான் முதலில் கருத்து தெரிவிக்க வேண்டும். நான் காலத்தை குறைத்த ஒருவன்தானே. பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தது அவரது கருத்து. அவருக்கு தலையில் ஏதோ பிரச்சினை உள்ளது என நினைக்கிறேன்.”

“நாம் பிறரிடம் இருந்து உண்ணும் தேசமாக மாறியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. அதனால் நமக்கு நாமே உணவு தயாரிக்கும் நிலைக்கு வர வேண்டும்.”

Leave A Reply

Your email address will not be published.