Developed by - Tamilosai
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம், நான் நாட்டின் ஜனாதிபதியாக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையில் இடம்பெற்றதையிட்டு மிகவும் வேதனை அடைகின்றேன்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலநறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.