தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து கொழும்பு பேராயருக்கு பரிசுத்த பாப்பரசர் கடிதம்

0 176

 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதம் பரிசுத்த பாப்பரசரின் கையெழுத்தில் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் அது தொடர்பாக தாம் பிரார்த்திப்பதாகவும் குறித்த கடிதத்தில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ள பரிசுத்த பாப்பரசர், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தைக் கூறுமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.